Breaking News

சிவன் கோயிலை இடித்து அஜ்மீர் தர்கா கட்டப்பட்டதாக வழக்கு.. மூன்று தரப்புகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0

சிவன் கோயிலை இடித்து அஜ்மீர் தர்கா கட்டப்பட்டதாக வழக்கு.. மூன்று தரப்புகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் காஜா மொய்தீன் சிஷ்தியின் பழம்பெரும் தர்கா அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அஜ்மீர் ஊரில் அமைந்துள்ளதால் இது அஜ்மீர் தர்கா என அழைக்கப்படுகிறது. அஜ்மீர் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும்.

 அஜ்மீர் தர்கா என்பது பிரசித்தி பெற்ற சூபி ஞானி காஜா முகையதீன் சிஷ்தி அவர்களின் அடக்கத்தலம் (மக்பரா) ஆகும்.

இந்நிலையில் இந்து சேனாவின் தலைவர் விஷ்ணு குப்தாஅஜ்மீர் நீதிமன்ற சிவில் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்

அதில் தர்காவின் ஜன்னல்களில் ஸ்வஸ்திக் மற்றும் தாமரையின் உருவச் சின்னங்கள் அமைந்துள்ளன  இவை இந்துக்கள் வணங்குவதாக உள்ளதால், தர்காவானது சிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதாக வாதிடப்பட்டதுஇதற்கான ஆதாரமான 1910-இல் வெளியான ஹர்விலாஸ் ஷர்தா வெளியீட்டின் நூல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையை தொடர்ந்து அஜ்மீர் நீதிமன்றம், தர்கா நிர்வாகம், மாநில சிறுபான்மை துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதுஇவர்கள் பதில்களை பெற்ற பின் மீண்டும் வழக்கை டிசம்பர் 5-ம் தேதி நீதிமன்றம் விசாரிக்க உள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback