கரையை கடக்கத் தொடங்கிய பெஞ்சல் புயல் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபென்ஜால் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.

மாலை 5.30 மணிக்கே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மரக்காணம் அருகே கரையைக் கடக்க தொடங்கிய ஃபென்ஜால் புயலால் பலத்த காற்று வீசி வருகிறது.தரையைத் தொட்டத்தில் இருந்து 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையைக் கடக்கும். 

மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும். புயல் கரையை கடந்த பின்பும் வட தமிழகத்தில் ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசி வருகிறது. 

தென்மேற்கு வங்கக் கடலில் “ஃபெஞ்சல் புயல்” கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று பகல் 2.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது. 

இது மாமல்லபுரத்துக்கு தென்கிழக்கே சுமார் 50 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-வடகிழக்கே 80 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே 90 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.இது இன்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடிய புயலாக கிட்டத்தட்ட மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை ஒட்டிய காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது. 

புயல் கடற்கரையை நெருங்கும்போது அதன் நகரும் வேகம் குறையும். புயல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்திருந்தது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback