பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் முழு விவரம்
அட்மின் மீடியா
0
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு ரயில் சேவைகள் மாற்றம் முழு விவரம்
பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் இருந்து வெளி மாநிலத்துக்கு செல்லும் ரயில்களின் பாதை மாற்றப்பட்டுள்ளது. வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து செல்லக்கூடிய மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பீச் ரயில் நிலையம் வழியாக செல்கிறது. கோவையில் இருந்து வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்து கோவைக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்