நாம் தமிழர் கட்சியில் இருந்து கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டு முழு விவரம்
நாம் தமிழர் கட்சியில் இருந்து கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டு முழு விவரம்
ஏற்கனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் அவ்வப்போது விலகி வரும் நிலையில், அவர்கள் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு மாவட்டச் செயலர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலர் கே.அபிராமி, வணிகர் பாசறை மாவட்டச் செயலர் பி.செந்தில்குமார், தொழிற்சங்க செயலர் ஏழுமலை பாபு ஆகியோர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனர். அப்போது கோவை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன் இதுகுறித்து
அருந்ததியர் சமூகத்தினர் குறித்த சீமானின் பேச்சு களத்தில் எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது
மேலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியின் கொள்கைக்கு முரணாக பேசி வருகிறார். அவர் தமிழ்த் தேசியம் பேசுவது, அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சொல்வது போன்றவையெல்லாம் ஏற்கத்தக்கவை இல்லை.
திராவிட பாரம்பரியம் வலுவாக உள்ள தமிழ்நாட்டில் சீமானின் கருத்துகள், பேச்சுகள் யாவும் எங்களைப் போன்ற நிர்வாகிகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றன.சீமானுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்கள் கட்சியில் இருந்து விலகிவிட்டனர்.
இதனால் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளின் குறைகளை பிரச்னைகளை கேட்கவும், சரி செய்யவும் கட்சியில் ஆள் இல்லை. களத்தில் இருப்பவர்களின் பிரச்னைகள் சீமானை சென்றடைவதில்லை. வேலைக்கான அங்கீகாரம் எங்களுக்கு கிடைப்பதில்லை.
பெண்களுக்கு சம உரிமை கொடுத்தாலும் பெண் நிர்வாகிகளின் கருத்துகளை அவர் ஏற்பதில்லை. எனவே அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்து இருக்கிறோம்.
எங்களைப்
போலவே தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சியின் நிர்வாகிகள் அதிருப்தியில்
உள்ளனர். ஆனால் அவர்கள் அடுத்து எந்த கட்சிக்கு செல்வது என்பது தெரியாமல்
குழப்பத்தில் உள்ளனர். எங்களின் விலகலை முறைப்படி மண்டல நிர்வாகிகளுக்கு
தெரிவித்துவிட்டோம் என்றார்
இதற்க்கு முன்னதாக
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த சுகுமார்
விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன்
விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன்,
மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி
சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரி தங்கம்
என்பவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்