ஐயப்பனை இழிவுபடுத்தி பாடல் இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது காவல்நிலையத்தில் புகார் நடந்தது என்ன முழு விவரம்
இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இயக்குநர் பா ரஞ்சித் நடத்தும் நீலம் பண்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் இந்து மத கடவுளான ஐயப்பனை இழிவுப்படுத்தும் வகையில் பாடல் பாடிய பாடகி இசை வாணி பாடி மீதும் இயக்குர் பா ரஞ்சித் மீதும் கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நீலம் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்த விழாவில் கானா பாடகி இசைவாணி, 'ஐ எம் சாரி ஐயப்பா.. உள்ளே வந்தா தப்பாப்பா' என்று ஐயப்பன் குறித்தும் கடவுள் நம்பிக்கை குறித்து இழிவுப்படுத்தும் வகையில் பாடலை பாடி இருந்தார்.
அதில் 'ஐ அம் சாரி ஐயப்பா..நா உள்ள வந்தா என்னப்பா... நான் தாடி காரன் பேபி
இப்போ காலம் மாறி போச்சு: நீ தள்ளி வச்சா தீட்டா..நான் முன்னேறுவேன் மாசா!
என்று பாட்டு பாடி இருக்கின்றார்.
இந்த பாடல் இணையத்தில் டிரெண்டான நிலையில் இணைவாசிகள் பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றன்ர். இந்து கடவுளையும், வழிபாட்டு முறையையும் கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் பாடிய இசைவாணி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நீலம் பண்பாட்டு மையம் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்