கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் உண்மையான நம்பிக்கை இல்லாமல் அரசு வேலை, சலுகை பெறுவதற்காக இந்து பட்டியலினத்தவராக மதம் மாறுவது மிகப்பெரிய மோசடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் உண்மையான நம்பிக்கை இல்லாமல் அரசு வேலை, சலுகை பெறுவதற்காக இந்து பட்டியலினத்தவராக மதம் மாறுவது மிகப்பெரிய மோசடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
புதுச்சேரியைச் சேர்ந்த சி.செல்வராணி இவரது தந்தை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர். தாயார் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். செல்வராணி தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றவர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநில அரசின் கிளார்க் பணியிடத்துக்காக பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் எனக்கூறி விண்ணப்பித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து செல்வராணி தனது தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால் தான் ஒரு இந்து என்று கூறி தனக்கு தாழ்த்தப்பட்டவருக்கான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்
ஆனால் கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில் அவரது தந்தை உள்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்தது. இதனையடுத்து செல்வராணி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில் தான் சிறு வயது முதல் இந்து மதத்தை பின்பற்றுவதாகவும், வளுவன் சமூகத்தை சேர்ந்தவர் என்றும், ஏற்கனவே கிறித்தவ மதத்துக்கு மாறினாலும் பின்னர் தான் சார்ந்த இந்து மதத்துக்கு திரும்பி விட்டதாக தெரிவித்திருந்தார். அதேபோல தனது தந்தை, சகோதரர் ஆகியோர் எஸ்.சி சான்றிதழ் வைத்துள்ளனர் என்றும், தனக்கும் எஸ்.சி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செல்வராணியை பொருத்தவரை அவர் சிறு வயது முதல் கிறித்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளார் தேவாலய பிரார்த்தனைகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று கிறித்தவ சமயத்தை பின்பற்றியுள்ளார் என்பது அரசு தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
இடஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்காக மதம் மாறுபவர்களுக்கு இதுபோல சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில்
மேல்முறையீடு செய்பவர் கிறிஸ்தவத்தை ஒப்புக்கொள்கிறார் என்பதையும், தவறாமல் தேவாலயத்திற்குச் செல்வதன் மூலம் விசுவாசத்தை தீவிரமாகப் பின்பற்றுகிறார் என்பதையும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிக்கின்றன.
இருந்தபோதிலும், அவர் தன்னை ஒரு இந்து என்று கூறிக்கொண்டு, வேலைவாய்ப்பின் நோக்கத்திற்காக பட்டியல் சாதி சமூகச் சான்றிதழை நாடுகிறார். அவளால் செய்யப்பட்ட இத்தகைய இரட்டைக் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது
மற்றும் ஞானஸ்நானம் பெற்ற பிறகு அவள் தன்னை ஒரு இந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. எனவே, மதப்படி கிறிஸ்தவராக இருந்தும், வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக மட்டுமே இந்து மதத்தைத் தழுவுவதாகக் கூறும் மேல்முறையீட்டாளருக்கு அட்டவணை சாதி வகுப்பு அந்தஸ்து வழங்குவது இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது மற்றும் மோசடிக்கு சமம்.
மேலும் அது அரசியலமைப்பு சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம். எனவே, இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை நாங்களும் உறுதி செய்கிறோம். என நீதிபதி மகாதேவன் எழுதிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்