Breaking News

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை முழு விவரம்

அட்மின் மீடியா
0

பட்டப்படிப்பை முன்கூட்டியே படித்து முடிக்கும் புதிய முறை முழு விவரம்

மாணவர்கள் விரும்பினால் இனி 4 மற்றும் 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டுக்கு முன்னரே படித்து முடிக்கலாம்; தேவைப்பட்டால் ஓராண்டு கூடுதல் காலமும் எடுத்துக் கொள்ளலாம்

 


இந்த முறையின் கீழ் பயில விரும்பும் மாணவர்களின் தகுதியை மதிப்பிட உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு குழுவை அமைக்கும்

இந்த புதிய முறை வரும் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என UGC அறிவிப்பு

UGC ஆணையம் நீங்கள் படிக்கும் பட்டப்படிப்புகாலத்தை குறைக்கவோ அல்லது நீட்டிக்கவோ அனுமதிக்கும் புதிய வசதி அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புதிய நடைமுறையில் உயர்கல்வி நிறுவனங்கள் குறைக்கப்பட்ட கால அளவுடன் கூடிய பட்டப் படிப்பு திட்டம் (ஏடிபி) மற்றும் நீட்டிக்கப்பட்ட கால அளவுடன் கூடிய பட்டப் படிப்பு திட்டங்களை வழங்குவதற்கான வழிகாட்டு நடைமுறைக்கு அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

அதாவது மாணவர்கள் விரும்பினால் 4 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டு கால இளங்கலை பட்டப்படிப்பை ஓராண்டு அல்லது 6 மாதங்களுக்கு முன்னரே படித்து முடித்துவிடலாம். தேவைப்பட்டால் 6 மாதங்கள் அல்லது ஓராண்டு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம்.

 

UGC releases norms for faster completion of degrees

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback