Breaking News

வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதியினர் சிறையில் அடைப்பு

அட்மின் மீடியா
0

வழக்கறிஞரை வெட்டிய சம்பவத்தில் ஆனந்தன், சத்யாவதி தம்பதியினர் சிறையில் அடைப்பு

ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய மனைவியையும் கைது செய்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார்.



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஏரித்தெரு பகுதியில் வசித்து வருபவர் 28 வயது கண்ணன் இவர் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார்,

ஓசூர் நாமல்பேட்டையில் குமாஸ்தாவாக பணியாற்றும் ஆனந்தன்  இவரது மனைவியும், வழக்கறிஞருமான சத்யவதியும்  வசித்து வருகின்றார்கள்

இந்நிலையில், இந்த நிலையில் ஒசூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு  கண்ணன் வந்த போது, ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரிடம் கிளார்க்காக பணி செய்து வந்த ஆனந்தன் என்பவர் அரிவாளால் கண்ணனை சரமாரியாக வெட்டினார்.

          


            

இதில், வழக்கறிஞர் கண்ணனுக்கு கழுத்து, தோள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மேலும் வழக்கறிஞரை வெட்டிய ஆனந்த் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் கண்ணன்  மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் சிலர் வழக்கறிஞர் கண்ணன் இறந்துவிட்டதாக செய்தி பரப்பி வருகின்றார்கள்

இந்த நிலையில், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாக குமாஸ்தா ஆனந்தன், அவருடைய மனைவி வழக்குரைஞர் சத்யவதி இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

வெட்டுப்பட்ட கண்ணன், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வழக்குரைஞர் சத்யவதியிடம் தவறாக பேசியும், அத்துமீறியும் நடந்து வந்ததும், அதை ஆனந்தகுமார் கண்டித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவ்வாறு கண்ணன் நடந்து கொண்டதால் ஆனந்தகுமார் அரிவாளால் வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1859237559429366172

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback