Breaking News

ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு காரணம் என்ன முழுவிவரம் இதோ

அட்மின் மீடியா
0

ஏ.ஆர்.ரகுமானை விட்டு பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு காரணம் என்ன முழுவிவரம் இதோ

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏஆர் ரஹ்மான்.இவரது மனைவி பெயர் சாய்ரா பானு. இவர்கள் 2 பேரும் கடந்த 1995ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி திருமணம் செய்தனர். இந்த தம்பதிக்கு கதிஷா, ரஹிமா என்ற  இரண்டு மகள்கள்களும் அமீன் என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தான் ஏஆர் ரஹ்மான் - சாய்ரா பானு ஆகியோர் பிரிவதாக அறிவித்துள்ளனர். 

சாய்ரா பானு தனது கணவர் ஏஆர் ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்:-

திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு மற்றும் அவரது கணவர் ஏஆர் ரஹ்மான் ஆகியோர் பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளனர். உணர்ச்சிகரமான அழுத்ததற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இருவரும் ஒருவரையொரும் ஆழமாகவும் நேசித்தாலும் கூட சிரமம் மற்றும் பதற்றங்கள் இருவருக்கும் இடையே தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியதை இருவரும் அறிந்துள்ளனர்.இந்த இடைவெளியை இணைக்க யாராலும் பாலம் போல் செயல்பட முடியாது. இதனால் இந்த முடிவை வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ளனர். 

இந்த இக்கட்டான நேரத்தில் சாய்ரா பானு, ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பளித்து அனைவரும் செயல்பட வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஏ.ஆர் .ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில்:-

“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for your kindness and for respecting our privacy as we walk through this fragile chapter.”

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback