Breaking News

கபர்ஸ்தான் செல்ல வழி வேண்டி இஸ்லாமிய மக்கள் அமைதி போராட்டம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
கபர்ஸ்தான் செல்ல வழி வேண்டி  இஸ்லாமிய மக்கள் அமைதி போராட்டம் முழு விவரம்


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சோத்துப்பாக்கம் கிராமத்தில் இஸ்லாமிய மக்கள் சார்பில் இறந்தவர்- களின் உடல் அடக்கம் செய்ய மயானம் வேண்டி ஆதார் கார்டு ஓட்டர்ஐடி களை கையில் ஏந்தியவாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைதி போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுக்கா ,  சோத்துப்பாக்கம் @ மேல்மருவத்தூர் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய , பாரம்பரியமிக்க மஸ்ஜிதே நூர் ஜமாஅத்தின் ,  முப்பத்தைந்து ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட நீண்ட நெடிய கோரிக்கையினை ஏற்று , கடந்த 26.12.2022-ம் நாளன்று, மாண்புமிகு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ,  அக் கிராம புல எண் : 123 -ல் ஏக்கர் 0.85 செண்ட் விஸ்தீரணமுடைய நிலமானது,  இஸ்லாமிய மக்களது அடக்கஸ்தலமாக (கஃபரஸ்தான்) பயன்படுத்தும் நோக்கில் , மயானத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.


ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த அடக்கஸ்தலத்திற்கான நிலத்தினையும் ; அந்த அடக்கஸ்தலத்திற்கு சென்று வர ஏதுவாக மாவட்ட நிருவாகத்தினரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட வழிப் பாதையினையும்  உடனடியாக நில அளவை செய்து , அவற்றின் சுவாதீனங்களை ஜமாஅத்தார்களது வசம் எவ்வித  காலதாமதமும் இன்றி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையினையும் ;  அந்த வழிப்பாதையில் மகாத்மா காந்தி தேசிய  ஊரக வளர்ச்சி  திட்டத்தின் கீழ் ,  மயான சாலை அமைத்திட ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை உடனடியாக விடுவிப்பு செய்து மயான சாலை அமைத்து தரப்படல் என்ற கோரிக்கையினையும் வலியுறுத்தி ,  

22.11.2024 வெள்ளிக் கிழமை அன்று பள்ளிவாசல் வளாகத்திற்கு எதிரே திரண்ட நூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கவன ஈர்ப்பு நிகழ்வினை நடத்தினார்கள். 
                                         

அப்போது தங்களது அடக்கஸ்தலத்தின் சுவாதீனத்தினை உடனடியாக தங்களது வசம்  ஒப்படைத்திட வேண்டும் அதற்குரிய ஆவணங்களை முறையாக ஆவணப்படுத்திட வேண்டும் என்ற தங்களது நியாயமான கோரிக்கைகளை இனிமேற்கொண்டும் , தமிழக அரசும் ,  மாவட்ட  நிருவாகமும் எவ்வித காலதாமதமும் செய்திடாமல்,அதற்கு உடனடியாக  செவிசாய்த்து , உரிய நிவாரணம்  அளித்திட வேண்டும் என்றும் ; இல்லையெனில்,  தங்களது வாழ்வியலுக்கு அச்சாரமாக உள்ள தங்கள்  அணைவர்களது அரசு அடையாள ஆவணங்களையும்,  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம்  திரும்ப ஒப்படைத்து விடுவதினைத் தவிர தங்களுக்கு வேறு வழி ஏதுவுமில்லை என்றும் ;  அந்த சூழலுக்கு தங்களது ஜமாஅத் இஸ்லாமியர்களை  தள்ளாமல் , தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சேர்ந்து, உடனடியாக தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு  செவி சாய்க்கும் என உறுதியாக நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback