அரசுப் பள்ளி ஆசிரியை குத்திக்கொலை - உயிருக்கு போராடிய ஆசிரியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே அரசுப் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கத்தியால் குத்திக்கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 

இந்நிலையில் சின்னமனை பகுதியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் மதன் குமார் என்ற இளைஞர் ஆசிரியை ரமணியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது 

ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்ததாலும் கடந்த 2 மாதமாக ஆசிரியை ரமணி பேசுவதை தவிர்த்து வந்ததால் இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பறையில் புகுந்து ரமணி கழுத்துப் பகுதியில் வெறித்தனமாக கத்தியால் குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த ரமணி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதனை பிடித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், தஞ்சாவூரில் ஆசிரியை ரமணியை குத்தி கொன்றவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பவம் நடைபெற்ற தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு பள்ளிக்கு செல்லவுள்ளேன். விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் பள்ளிக்கு நேரில் செல்கிறார் என கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

தஞ்சாவூர் மாவட்டம். பட்டுக்கோட்டை வட்டம். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பட்டதாரி தமிழ் ஆசிரியையாகப் பணிபுரிந்துவந்த செல்வி ரமணி (வயது 26) த/பெ.முத்து அவர்கள் இன்று (20.11.2024) காலை பள்ளி வளாகத்தில் இருந்தபோது மதன்குமார் என்ற நபரால் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியைக்கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். 

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாண்புமிகு உயர்கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை உயிரிழந்த ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள இச்சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது, இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

ஆசிரியரை கொலை செய்த மதன் குமார்


இவ்வழக்கின் விசாரணை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும்.  கிராமப்புறப் பகுதியில் கல்விப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட செல்வி ரமணி அவர்களின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும். சக ஆசிரியர்களுக்கும். மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். செல்வி ரமணி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். அவரது உறவினர்கள். சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, செல்வி ரமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1859238541618037231

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback