சலூனில் மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம் என பரவும் வீடியோ உண்மையா?
சலூனில் ஒரு இளைஞன் தலைக்கு மசாஜ் செய்யும் போது பணியாளர் அந்த இளைஞனின் தலையைப் பிடித்து திருப்புகிறார்.இவ்வாறு செய்யும் போது அந்த இளைஞனின் கழுத்து பிடிபட்டுள்ளது. சிறிது நேரத்தில் அந்த இளைஞன் மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடை ஊழியர் பயந்து போய் கடையை விட்டு ஓடினார். என ஓர் வீடியோவை உண்மையாக நடந்தது என பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்
உண்மை என்ன:-
சலூனில் மசாஜ் செய்துகொண்டே இருக்கும் போது இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து பரவி வரும் காணொளியின் முடிவில், விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்று அதில் வருகின்றது மேலும் அதில் உள்ள அனைவரும் நடிகர்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது
கன்னட நடிகை சஞ்சனா கல்ராணி கடந்த 07.11.2024 அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அந்தவீடியோவை ஷேர்செய்து இந்த வீடியோ விழிப்புணர்ச்சிக்காக எடுக்கப்பட்ட சித்தரிக்கப்பட்ட வீடியோ என அவர் குறிப்பிட்டுள்ளார்
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://www.facebook.com/watch/?v=882385504007285
Tags: FACT CHECK மறுப்பு செய்தி