ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை போன்றவர் வீடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!
ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை போன்றவர் தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள் வீடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் எனது தந்தையை போன்றவர் அவர் ஒரு லெஜெண்ட்.. தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள். பிறரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் வீடியோ வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே!
தங்களது 29 வருட மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாகவும், தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலே இதற்கு காரணம் என்றும் ஏ.ஆர். ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் அண்மையில் அறிவித்தனர்.
ரஹ்மான் தம்பதியின் விவாகரத்து வெளியான அடுத்த சில மணிநேரங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இசைக்குழுவில் கிடார் இசைக்கலைஞரான மோகினி டே விவாகரத்து அறிவிப்பு பெரும் பேசுபொருளாக மாறியது. இவரையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் இணைத்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அனைவரின் கவனமும் மோகினி டே பக்கம் திரும்பியது.
இந்நிலையில் இசைக்கலைஞர் மோகினி டே இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் அதில்
ஆதாரமற்ற, தவறான தகவல் பரப்பப்படுவது ஏற்க முடியாத ஒன்றாக இருக்கிறது. எனது விவாகரத்து விவகாரம் கொச்சைப்படுத்தப்பட்டு உள்ளது.
அவரது இசைக்குழுவில் பல ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன்.ஏ.ஆர். ரஹ்மான் எனது தந்தையை போன்றவர். நான் மிகவும் மதிக்கும் நபர். எங்கள் இருவருக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தனிமை என்ற முடிவு மிகவும் வலி மிகுந்தது. எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். இவ்வாறு அவர் தமது வீடியோ பதிவில் கூறி உள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1861254053004746933
Tags: வைரல் வீடியோ