Breaking News

மகாராஷ்டிராவில் பரபரப்பு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே அடுத்த முதல்வர் யார் முழு விவரம்

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

இதில் பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றியது அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 

இந்நிலையில் முதல்வராக பதவி வகித்து வந்த ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்தது

ஆனால், 132 இடங்களை கைப்பற்றி உள்ளதால், அக்கட்சியின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ்ஸை முதல்வராக்க காய் நகர்த்தியதுமேலும் பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும், முதல்வர் போட்டியில் தான் இல்லை எனவும் அஜித் பவார் கூறினார். 

இந்த நிலையில், மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து இன்று ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை  சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback