Election Result 2024 LIVE மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் ஆட்சியை பிடிக்கப்போவது யார் முழு விவரம்
Election Result 2024 LIVE மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் ஆட்சியை பிடிக்கப்போவது யார் முழு விவரம்
Maharashtra & Jharkhand Assembly Election Result 2024 |
மணி நிலவரப்படி:-
ஜார்கண்ட் தேர்தல் முண்னனி நிலவரம்::-
பாஜக கூட்டணி 28 இடங்களில் முன்னிலை
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 51 இடங்களில் முன்னிலை
மற்ற கட்சிகள் 2
மகாராஷ்ட்டிரா தேர்தல் முண்னனி நிலவரம்::-
பாஜக கூட்டணி 221 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் கூட்டணி 53 இடங்களில் முன்னிலை
மற்ற கட்சிகள் 14 இடங்களில் முன்னிலை
குறிப்பு :- வாக்குகள் எண்ணிக்கை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து இங்கு வந்து பார்க்கவும்
ஜார்கண்ட்:-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-த் தேதி முடிவடைந்தது. மீதம் இருந்த 38 தொகுதிகளுக்கு 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.இரு கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் 68% வாக்குகள் பதிவாகியுள்ளது ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
பெரும்பான்மை:-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 41 இடங்கள் தேவை.
கூட்டணி:-
தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்
அதன்பின்பு அவரது கட்சியை சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். 5 மாதங்களுக்குப் பிறகு ஹேமந்த் சோரன் ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். பிறகு ஹேமந்த் சோரன் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்வு செய்தனர். இதையடுத்து முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று அவர் இணைந்தார்
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும்,
சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் பாஜக கட்சியின் ஆதரவுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் இன்று (நவம்பர் 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 62% வாக்குகள் பதிவானது
பெரும்பான்மை:-
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
கூட்டணி:-
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது.
பாஜக 149 இடங்களிலும்,
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும்,
துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.
காங்கிரஸ் 101 இடங்களிலும்,
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும்,
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்