பெஞ்சல் புயல் - தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? முழு விவரம் FengalCyclone
பெஞ்சல் புயல் - தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
பெஞ்சல் (FENGAL) புயல் 30.11.2024 அன்று கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை:-
சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
மேலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு. தேர்வு போன்ற எந்த நிகழ்வுகளும் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட இதர மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தேவைக்கேற்ப முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
WORK FROM HOME
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Work from Home) தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (30.11.2024) வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போக்குவரத்து நிறுத்தம்:-
பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படும்
பூங்காக்கள் மூடல்:-
ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள பூங்காக்கள் செல்ல தடைவிதிப்பு! சென்னை வண்டலூர் பூங்கா நாளை மூடப்படும்
செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலை.யின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
விளம்பர போர்டுகள்:-
விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது
கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும்
அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்களை கீழே இறக்கி வைக்க வேண்டும்
அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் வெளியில் செல்லவேண்டாம்:-
பொது மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் 30.11.2024 அன்று புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
குறிப்பாக கடற்கரை. பொழுதுபோக்கு பூங்காக்கள். கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொள்கிறது. மேலும், அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
7 மாவட்டங்களில் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் சில நீர்நிலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மூலம்: இந்திய வானிலை ஆய்வுத் துறை
மெரினா கடற்கரை:-
பெஞ்சல் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை சாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்படுகிறது!
விமான சேவை:-
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 13 விமானங்களின் சேவை நாளை ரத்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, மைசூர், புவனேஸ்வர், கவுஹாத்தி பகுதிகளுக்கு விமான சேவை ரத்து வானிலையை பொறுத்து நாளை விமானங்கள் மாற்றம் செய்யப்படும் என்று நிர்வாகம் அறிவிப்பு
Tags: தமிழக செய்திகள்