தமிழக அரசின் அறுபடை வீடு இலவச ஆன்மிக சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம் முழு விவரம் free arupadai veedu tour by tamilnadu government
தமிழக அரசின் அறுபடை வீடு இலவச ஆன்மிக சுற்றுலா செல்ல விண்ணப்பிக்கலாம் முழு விவரம் free arupadai veedu tour by tamilnadu government
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை சார்பாக மூத்த குடிமக்களின் பொருளாதார சூழல் மற்றும் அவர்களுடன் துணையாக சென்று உதவிடும் நிலை இல்லாமல் இருக்கின்ற மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் பல்வேறு ஆன்மிகப் பயணங்களை அரசு மானியத்தில் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்காக அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் செல்ல சென்னை மண்டலத்திலிருந்து 90 நபர்களும், காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து 60 நபர்களும், வேலூர் மண்டலத்திலிருந்து 50 நபர்களும் என மொத்தம் 200 நபர்கள் 3 நாட்கள் ஆன்மிகப் பயணமாக புறப்படுகின்றனர். 2025 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1.008 மூத்த குடிமக்கள் அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தை நிறைவு செய்வார்கள். இத்திட்டத்திற்காக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது.
விதிமுறைகள்:-
அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஆன்மிக பயணம் செல்வதற்கு தேர்வு செய்து அனுமதிக்கப்படுவர்
1. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
2. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும். 70 வயதிற்குட்பட்டவாராகவும் இருத்தல் வேண்டும். 3. வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.
4. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்களுக்கு போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும்.
5. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்கப்படவேண்டும்.
6. அறுபடை வீடு ஆன்மிக பயணம் செல்லும் பக்தர்கள் தங்களுடன் சிறு குழந்தைகள் அழைத்து வர அனுமதி இல்லை.
7. ஆதார் கார்டு அல்லது நிரந்தரக் கணக்கு எண் (Pan card) நகல் இணைக்கப்பட வேண்டும்.
8. விண்ணப்பங்கள் அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பெற்றுக் கொண்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
9. மேலும் விண்ணப்பங்கள் இத்துறை வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து (hrce.tn.gov.in).
10. ஆன்மிக பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்க வேண்டும்.
11. பக்தர்கள் ஒரு முறை மட்டுமே இப்பயணத்தில் கலந்து கொள்ள முடியும்.
விண்ணப்படிவம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/178/document_1.pdf
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி