Breaking News

வீடுகள், கட்டிடங்களை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு Govt not empowered to take bulldozer action Supreme Court

அட்மின் மீடியா
0

வீடுகள், கட்டிடங்களை இடிக்கும் புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு அதிரடி உத்தரவு 

சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது ஜனநாயக நாடு.வீடு கட்டுவது அரசியல் அமைப்பு சட்டம் 19, 21 கொடுத்துள்ள உரிமை, அதை அரசு அதிகாரிகள் தன்னிஷ்டத்திற்கு இடிக்க முடியாது. தனி நபர் உரிமையை மீறுவதாகும் என தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதிகார வர்க்கம் எடுத்துக் கொள்ள முடியாது. புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி அரசுகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரசு நிர்வாகம் நீதிபதியாகி குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீட்டை இடிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்கள்.

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது சட்ட விரோதம், நீதித்துறை நடவடிக்கைகளில் அதிகாரிகள் எப்படி ஈடுபட முடியும். நீதி மன்றம் தீர்ப்பு தான் ஒருவரை குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.அரசு அதிகாரிகள் எப்படி முடிவு செய்கின்றனர்? வழக்கில் தண்டனை பெற்றாலே வீட்டை இடிக்க முடியாது, ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டாலே வீடு எப்படி இடிக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்பதாலேயே ஒருவரை குற்றவாளி என எப்படி தீர்மானிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி தடை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் B.R.கவாய், K.V.விஸ்வநாதன் அமர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback