ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து கொண்ட இந்தியா கூட்டணி முழு விவரம் Jharkhand Election 2024
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைத்து கொண்ட இந்தியா கூட்டணி முழு விவரம்
ஜார்கண்ட்:-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-த் தேதி முடிவடைந்தது. மீதம் இருந்த 38 தொகுதிகளுக்கு 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.இரு கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் 68% வாக்குகள் பதிவாகியுள்ளது ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.
பெரும்பான்மை:-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 41 இடங்கள் தேவை.
கூட்டணி:-
தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்
அதன்பின்பு அவரது கட்சியை சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். 5 மாதங்களுக்குப் பிறகு ஹேமந்த் சோரன் ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். பிறகு ஹேமந்த் சோரன் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்வு செய்தனர். இதையடுத்து முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று அவர் இணைந்தார்
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும்,
சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.
ஜார்கண்ட் தேர்தல் முண்னனி நிலவரம்::-
பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை
மற்ற கட்சிகள் 2
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்