Breaking News

jharkhand exit poll 2024 ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கபோவது யார் கருத்துகணிப்பு முடிவுகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 13-த் தேதி முடிவடைந்தது. மீதம் இருந்த 38 தொகுதிகளுக்கு 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரு கட்டங்களாக நடந்த இந்த தேர்தலில் 68% வாக்குகள் பதிவாகியுள்ளது  ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

பெரும்பான்மை:-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கு 41 இடங்கள் தேவை.

கூட்டணி:-

தேர்தலுக்கு முன்பு, ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்

அதன்பின்பு அவரது கட்சியை சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக பதவியேற்றார். 5 மாதங்களுக்குப் பிறகு ஹேமந்த் சோரன் ஜூலை 28-ம் தேதி ஜாமீனில் வெளிவந்தார். பிறகு ஹேமந்த் சோரன் சட்டப்பேரவை கட்சி தலைவராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்வு செய்தனர். இதையடுத்து முதல்வர் பதவியை சம்பாய் சோரன் ராஜினாமா செய்தார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிகாரபூர்வமாக பாஜகவில் ஆகஸ்ட் 30-ம் தேதி அன்று அவர் இணைந்தார்

இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும், 

சம்பாய் சோரனை முன்னிறுத்தி, பா.ஜ.க தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. 



தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

சி.என்.என். கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 45 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 33 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

பீப்பிள்ஸ் பல்ஸ் கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 44-53 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 25-37 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 5-9 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 42-47 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 25-30 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 1-4 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

ஜேவிசி எக்ஸிட்

பாஜக கூட்டணி 40-44 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 30-40 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 0-1 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 40-44 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 30-40 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 0-1 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

பி-மார்க் கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 31-40 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 37-47  இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு:-

பாஜக கூட்டணி 37 முதல் 40 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 36-39 இடங்களில் வெற்றி பெறும் எனவும்

மற்ற கட்சிகள் 0-2 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அறிவித்துள்ளது

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றன, மேலும் தொங்கு சட்டசபை அமையும் என சில ஊடகங்களும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளன. 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback