Breaking News

தமிழ்நாடு அரசின் இல‌வ‌ச‌ காசி பயணம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் kasi free tour in tamilnadu 2024

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு அரசு இல‌வ‌ச‌ காசி பயணம் tamilnadu goverment kashi tour தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச ஆன்மிக சுற்றுலா மேற்கொள்ள நிலையில் தற்போது 2024-25 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


2024-2025 காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகள் 

1) காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராகவும். இறை நம்பிக்கை உடையவராகவும். தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். 

2) விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்பட வேண்டும். 

3) விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-ற்கு மிகாமல் இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும் 

4) காசி ஆன்மிகப் பயணம் (10 நாட்கள்) சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான அரசு மருத்துவரின் (Government Civil Surgeon) சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 


 

5) விண்ணப்பதாரர்கள் தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரம் இணைக்க வேண்டும். 

6) விண்ணப்பதாரர்களின் Aadhaar Card ஆதார் அட்டை நகல் (அல்லது) PAN Card நிரந்தரக் கணக்கு எண் அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும். 

7) இந்து FLDILL அறநிலையத்துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 21 விண்ணப்பதாரர்கள் வீதம், 20 இணை ஆணையர் மண்டலத்திலிருந்து 420 விண்ணப்பதாரர்கள் மட்டும் மண்டல இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர். 

8) ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களை தங்களது இருப்பிடம் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 16.12.2024-க்குள் அனுப்ப வேண்டும். வேறு மண்டல இணை ஆணையர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

9) விண்ணப்பதாரரின் கணவர் / மனைவி (spouse) விண்ணப்பித்திருந்தால். அதன் விபரத்தினை விண்ணப்பதாரர் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 

10) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பத்து நாட்கள் பயணத்திற்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள்/பொருட்களை தங்களுடன் எடுத்து வரவேண்டும்.


 

11) தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி இல்லை. 

12) தேர்வு செய்யப்படும் 420 விண்ணப்பதார்களையும். ஒரே பயணமாக அல்லாமல் 6 அல்லது 7 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போது, ஒவ்வொரு பயணத்திற்கும் இணை ஆணையர் மண்டல வாரியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர். 

13) ஆன்மிகப் பயணத்தின்போது மிக விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து வருதல் கூடாது. 

14) இராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடித்து மீண்டும் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமியை தரிசித்த பின்னரே நிறைவுபெறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

15) ஆன்மிக பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட பயண தேதிக்கு முந்தைய நாளே தமது சொந்த செலவில் இராமேசுவரம் வந்து அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் தமது வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறே இராமேசுவரத்தில் ஆன்மிக பயணம் நிறைவு செய்த பின்னர் தமது சொந்த செலவில் அவரவர் இருப்பிடம் திரும்ப வேண்டும். 



16) விண்ணப்பதாரர் தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியானவர் என்பதால் இதற்கு முன் அரசு செலவில் காசி ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவர்கள் மீள விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/149/document_1.pdf

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback