Breaking News

அரசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தால் பைக், LED TV, ப்ரிட்ஜ் பரிசு வழங்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அரசு பேருந்தில் முன்பதிவு செய்வோர்க்கு பைக், LED TV, ப்ரிட்ஜ் குலுக்கல் பரிசு வழங்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகம்

ஆன்லைனில் தொலைதூர அரசு பேருந்துகளை முன்பதிவு செய்வோர்க்கு சிறப்பு குலுக்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிப்பு

முதல் பரிசு - இருசக்கர வாகனம், 

இரண்டாம் பரிசு LED TV, 

மூன்றாம் பரிசு - குளிர்சாதன பெட்டி 

நவ.21 முதல் ஜன.20 வரை பயணம் செய்ய TNSTC இணையதளம் மற்றும் செயலி மூலமாக பேருந்து முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு

வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டும் மற்றும் ஒரு சிறப்பு குலுக்கல் முறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

1. வழக்கமான மாதாந்திர குலுக்கல் முறை-2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். 

ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10.000 வழங்கப்படும். 

மற்ற பத்து வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். தலா ரூ.2,000 

2. சிறப்பு குலுக்கல் முறை: OTRS-இன் கீழ் முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மூன்று அற்புதமான உயர் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். 

இது 2024 நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளும் இச் சிறப்பு குலுக்கல் முறைக்கு தகுதி பெறும். 

பரிசுகள் "சிறப்பு குலுக்கல்" பொங்கல்-2025 பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டு பின்வருமாறு சிறப்பு உயர் பரிசுகள் வழங்கப்படும். 

பொதுமக்கள், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் மூலம் பயணம் செய்ய முன்பதிவு செய்து, கடைசி நேர சிரமங்களை தவிர்த்து எளிதாக பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

 பேருந்து முன்பதிவு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnstc.in/OTRSOnline/ 

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback