மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்க வைத்த பாஜக கூட்டணி முழு விவரம் Maharashtra election bjp again
மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்த பாஜக கூட்டணி முழு விவரம்
கடந்த 2019 தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்த சிவசேனா கட்சி 56 தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால், முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம்பிடித்ததால் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது.
அடுத்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் பதவியை ஏற்றார் உத்தவ் தாக்கரே . ஆனால் சில ஆண்டுகளில் அந்த கட்சியில் இருந்து ஷிண்டே தலைமையிலான ஆதரவாளர்கள் விலகி பாஜக ஆதரவுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் இன்று (நவம்பர் 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 62% வாக்குகள் பதிவானது
பெரும்பான்மை:-
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
கூட்டணி:-
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது.
பாஜக 149 இடங்களிலும்,
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும்,
துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.
காங்கிரஸ் 101 இடங்களிலும்,
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும்,
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை:-
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், பாஜக உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2024 தேர்தலில், காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த நிலையில், வெறும் 20 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
முன்னிலை:-
பாஜக 145 இடங்களில் போட்டியிட்டது அதில் 130 இடங்களில் முன்னிலை
சிவசேனா (ஷிண்டே) 81 இடங்களில் போட்டியிட்டது அதில் 56 இடங்களில் முன்னிலை
என்சிபி (அஜித்பவார்) 59 இடங்களில் போட்டியிட்டது அதில் 38 இடங்களில் முன்னிலை
காங்கிரஸ் 102 இடங்களில் போட்டியிட்டது அதில் 21 இடங்களில் முன்னிலை
சிவசேனா (உத்தவ்) 92 இடங்களில் போட்டியிட்டது அதில் 17 இடங்களில் முன்னிலை
என்சிபி (சரத்பவார்) 86 இடங்களில் போட்டியிட்டது அதில் 12 இடங்களில் முன்னிலை
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்