Maharashtra Exit Poll 2024 மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி கருத்துகணிப்பு முடிவுகள் இதோ
Maharashtra Exit Poll 2024 மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி கருத்துகணிப்பு முடிவுகள் இதோ
மகாராஷ்டிராவில் பாஜக கட்சியின் ஆதரவுடன் சிவசேனாவில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதன் பதவிக்காலம், நவம்பர் மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அம்மாநிலத்தில் இன்று (நவம்பர் 20) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
அதன்படி, 288 தொகுதிகளைக் கொண்ட மகராஷ்டிரா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது.இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 62% வாக்குகள் பதிவானது
பதிவாகிய வாக்குகள் நாளை மறுநாள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
பெரும்பான்மை:-
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
கூட்டணி:-
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது.
பாஜக 149 இடங்களிலும்,
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 81 இடங்களிலும்,
துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளது.
காங்கிரஸ் 101 இடங்களிலும்,
உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 95 இடங்களிலும்,
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 86 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்:-
பி-மார்க் கருத்துக்கணிப்பு:-
பாஜக கூட்டணி 137 முதல் 157 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் எனவும்
காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 இடங்களில் வெற்றிபெறும்
மற்ற கட்சிகள் 2 முதல் 8 இடங்களிலும் வெல்லும் எனவும் அறிவித்துள்ளது
ஏபிபி மெட்ரிஸ் கருத்துகணிப்பு:-
பாஜக கூட்டணி 150 முதல் 170 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் எனவும்
காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 இடங்களில் வெற்றிபெரும்
மற்றக் கட்சிகள் 8 முதல் 10 தொகுதிகள் வெல்லும் எனவும் அறிவித்துள்ளது
CNN News18 கருத்துக் கணிப்பு
பாஜக கூட்டணி 154 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் எனவும்
காங்கிரஸ் கூட்டணி 128 இடங்களில் வெற்றிபெறும்
மற்ற கட்சிகள் 6 இடங்களிலும் வெல்லும் எனவும் அறிவித்துள்ளது
Poll Diary வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு:-
பாஜக கூட்டணி 122 இடங்கள் முதல் 186 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் எனவும்
காங்கிரஸ் கூட்டணி 69 முதல் 121 இடங்களில் வெற்றிபெறும்
மற்றவை 12 முதல் 29 இடங்களிலும் வெல்லும் எனவும் அறிவித்துள்ளது
Peoples Pulse கருத்துக்கணிப்பு:-
பாஜக கூட்டணி 175 முதல் 195 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் எனவும்
காங்கிரஸ் கூட்டணி 85 முதல் 112 இடங்களில் வெற்றிபெறும்
மற்றவை 7 முதல் 12 இடங்களிலும் வெல்லும் எனவும் அறிவித்துள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்