மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு வன்முறை துப்பாக்கிசூடு 3 பேர் பலி Sambhal masjid
உ.பியில் கோவிலை இடித்து மசூதி கட்டியிருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு - போலீஸ் குவிப்பு வீடியோ
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து மசூதி கட்டியிருப்பதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது கல்வீசி தாக்குதல்
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய மிக்க ஹிந்து கோயிலை இடித்து ஜாமா மசூதி கட்டப்பட்டதாக உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான விஷ்ணு சங்கா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி இரு தரப்பினரின் முன்னிலையில் நீதிமன்ற ஆணையா் கடந்த நவ. 5 மசூதியில் ஆய்வு நடத்தினாா். நீதிமன்ற ஆணையா் தனது அறிக்கையை நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்வாா் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை ஜாமா மசூதியில் ஆய்வு செய்ய இரண்டாவது முறையாக ஆய்வுக் குழுவினர் சென்றுள்ளனர். அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் உருவானது
அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். நிலமையைக் கட்டுக்குள் கொண்டுவர போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் நயீம், பிலால், நௌமான் ஆகிய மூவர் உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்களில் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மசூதியின் அருகே கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களின் விடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற ஜனவரி 29 நடைபெறவுள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1860631126907445617
Tags: அரசியல் செய்திகள்