மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு UP Madarsa Education Act valid Supreme Court
உத்தரப் பிரதேசத்தின் மதரஸா பள்ளிகள் சட்டத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2004-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மதரஸா கல்வி வாரிய சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறி மதரஸா சட்டத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் சட்டத்தை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2004-ல் சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மதரஸா கல்வி வாரிய சட்டத்தின் மூலம் அங்குள்ள 16,000 மதரஸாக்களில் 17 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்நிலையில் உ.பி மதரஸா கல்வி வாரிய சட்டம், மதசார்பின்மை விதிமுறைகளை மீறுவதால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி உபியை சேர்ந்த வழக்கறிஞர் அன்சுமன் சிங் ரத்தோர் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி