பெங்கல் புயல் தற்போது எங்கு உள்ளது? எங்கு கரையை கடக்கும் சாட்டிலைட் VIEW windy live weather
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது . தமிழ்நாடு கடற்கரையை நோக்கி தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம், நாளை(நவம்பர் 27) புயலாக வலுப்பெறக் கூடும்- இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ‘FENGAL' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெங்கல் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
நேற்று (25-11-2024) காலை 0830 மணி அளவில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (26-11-2024) காலை 0830 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை - திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 590 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 710 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால்
27-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த பெங்கல் புயல் தற்போது எங்கு உள்ளது நேரடி சாட்டிலைட் காட்சிகள்.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..