ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்! Changes From January 1
ஜனவரி 1, 2025 முதல் விதி மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைல் இ-வே பில் கட்டுப்பாடுகள்:-
180 நாட்களுக்கு மேல் பழமையான அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே இ-வே பில்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து விசா:-
தாய்லாந்து அதன் உலகளாவிய இ-விசா தளமான www.thaievisa.go.th ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இது இந்தியர்கள் உட்பட சர்வதேச பயணிகள் ஆன்லைனில் விசாவுக்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கும் .
வாட்ஸப் வேலை செய்யாது:-
ஜனவரி 1, 2025 முதல் பல பழைய Android சாதனங்களில் WhatsApp செயல்படுவதை நிறுத்தஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Samsung Galaxy S3, LG Nexus 4, HTC One X மற்றும் Moto G மாடல்கள் அடங்கும்.
எல்பிஜி சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் எல்பிஜி விலையை மதிப்பாய்வு செய்கின்றன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் (14.2 கிலோ) விலையில் மாற்றம் இல்லை.
அதே நேரத்தில் வர்த்தக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 73.58 டாலராக இருப்பதால், ஜனவரி தொடக்கத்தில் எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Amazon Prime membership:-
ஜனவரி 1 முதல் பிரைம் வீடியோவை ஒரு பிரைம் கணக்கிலிருந்து இரண்டு டிவிகளில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய முடியும். யாராவது மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவைப் பார்க்க விரும்பினால், அவர் கூடுதல் சந்தா எடுக்க வேண்டும். முன்னர் பிரைம் உறுப்பினர்கள் ஒரு கணக்கிலிருந்து ஐந்து சாதனங்களில் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம்.
UPI 123 Pay
UPI 123 Pay இன் புதிய பரிவர்த்தனை வரம்பு ஃபீச்சர் போன் பயனர்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிமுகப்படுத்திய UPI 123Pay சேவையில் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கார் விலை உயர்வு:-
ஜனவரி 1 முதல் மாருதி சுசுகி, ஹூண்டாய் ,மகேந்திரா, ஹோண்டா, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற முக்கிய நிறுவனங்கள் விலையை 3 சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
Tags: இந்திய செய்திகள்