Breaking News

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழக ஊர்காவல் படையில் பணி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் orr kaval padai application 2024

அட்மின் மீடியா
0

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள ஆண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஊர்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும், 

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும் 

பொது தகுதி :- பொதுநல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும்.  மேற்படி தகுதிகள் உள்ள அனைவரும் https://bit.ly/3ZNfZoT என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து. பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவண நகல்கள் :- 

பிறப்புச் சான்றிதழ் 

ஆதார் அட்டை 

கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள் 

தற்போதைய புகைப்படம்-2 (Passport Size Photo) 

விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் :- 15.01.2025 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback