Breaking News

புயல் காரணமாக 10 மாவட்டங்களில் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்தஅவகாசம் -தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட மக்கள், மின்சார கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது

இந்நிலையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்ட மக்கள், மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை காலநீட்டிப்பு தமிழ்நாடு அரசு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த, டிசம்பர் 10ஆம் தேதி வரை கால நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது

விழுப்புரம், 

கடலூர், 

கள்ளக்குறிச்சி, 

தருமபுரி, 

கிருஷ்ணகிரி 

திருவண்ணாமலை 

சென்னை, 

காஞ்சிபுரம், 

திருவள்ளூர் 

செங்கல்பட்டு  ஆகிய 10 மாவட்டங்களில் மின் கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்தஅவகாசம் -தமிழக அரசு அறிவிப்பு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback