ஆண்டிற்கு இரு முறை மாணவர் சேர்க்கை ,12 ம் வகுப்பில் எந்த குரூப் படித்தாலும், விரும்பிய பட்டப்படிப்பில் சேரலாம் ,ஒரு பட்டப்படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி வேறு படிப்பில் சேரலாம்வதற்கான multiple entry and exit முறை புதிய கல்விக்கொள்கை நடைமுறைகள் அமல் முழு விவரம்

தேசிய கல்வி கொள்கையின் படி உயர்கல்வியில் பல்வேறு மாற்றங்களை செய்து யுஜிசி வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு முறையும், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் ஒருமுறையும் என இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 12ம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவை படித்திருந்தாலும், இளங்கலை படிப்பில் எந்த துறையிலும் சேரலாம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் விரும்பும் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேரலாம்
மேலும் இளங்கலை பாடப்பிரிவில் படித்த பாடப்பிரிவுக்கு பதிலாக, முதுநிலை படிப்பில் எந்தவொரு பாடப்பிரிவையும் தேர்வு செய்யலாம்.
மேலும் ஒரே நேரத்தில் இரண்டு இளநிலை, முதுகலை படிப்பை தொடரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தேசிய அளவில் அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என கூறப்படுகிறது.
Tags: கல்வி செய்திகள்