Breaking News

மும்பையில் பயணிகள் படகு மீது விரைவு படகு மோதி விபத்து 13 பேர் பலி அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா குகைகளுக்கு சுமார் 85 பயணிகளை ஏற்றிச் சென்ற நீல்கமல் படகில் செல்லும் போது அதிவேகமாக 4 பேருடன் வந்த மோட்டர் படகு நீல்கமல் படகின் மீது மோதிய வேகத்தில் படகிலிருந்த ஐவர் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளனர். பரபரப்பு வீடியோ காட்சிகள்

மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து இன்று மாலையில் எலிபெண்டா தீவுக்கு பயணிகள் படகு சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து வந்த கடற்படை படகு பயணிகள் படகின்மீது பயங்கரமாக மோதியது.

இதில் பயணிகள் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். கடலோர காவல் படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 13 பேர் பலியானதாகவும், 101 பேர் மீட்கப்பட்டதாகவும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை துறைமுகத்தில் கடற்படை படகின் என்ஜினை சோதனை செய்துகொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1869405014483189875

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback