மனிதர்களை 15 நிமிடங்களில் குளிப்பாற்றி காய வைக்கும் மனித வாஷிங் மெஷின் ஜப்பானில் அறிமுகம் Human Washing Machine

அட்மின் மீடியா
0

மனிதர்களை 15 நிமிடங்களில் குளிப்பாற்றி காய வைக்கும் மனித வாஷிங் மெஷினை ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

அந்த மெஷினுக்குள் நாம் ஏறியதும் பாதி அளவுக்கு இதமான நீர் நிரப்பப்பட்டு, சிறிய குமிழ்களுடன் சுற்றியும் வேகமாக நீர் பீய்ச்சி அடிக்கப்படும். குமிழ் உடையும்போது உருவாகும் அழுத்தத்தினால் உடல் சுத்தமாகும்,அதிலிருந்து வெளிவரும் வேகமான தண்ணீர் ஜெட், மசாஜ் அனுபவத்துடன் நரம்புகளை தளர்வூட்டும்.



இந்த இயந்திரம் ஆடைகளை போலவே மனிதர்களையும் 15 நிமிடத்தில் குளிப்பாட்டி உலர்த்திவிடுமாம். இந்த கண்டுபிடிப்பு எதிர்காலத்தில் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய சாதனமாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வடிவமைப்பில் அதிக எண்ணிக்கையிலான மசாஜ் பந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த சாதனம் Osaka Kansai Expo-வில் 1,000 விருந்தினர்களால் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback