Breaking News

வங்ககடலில் 15ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்தம் உருவாகும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்

அட்மின் மீடியா
0

தற்போது வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவும் நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 


வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலையில் பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு பெய்து வருகிறது

இந்நிலையில் தென் மண்டல வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது, வரும் 15 ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. 

மேலும், வடகிழக்கு பருவமழை ஜனவரி 15 ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. இதுவரையிலான காலகட்டத்தில், வடகிழக்குப் பருவ மழையால இயல்பை விட 16 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலு குறைந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் மழை படிப்படியாக குறைய வாய்ப்பு. 

அதேபோல், வரும் 15 ஆம் தேதி அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால், துல்லியமாக கணிக்க முடியவில்லை. இன்றைய சூழலில் புயல் மழை போன்றவற்றை கணிப்பது கடினம்

பெஞ்சல் புயல் திசையை சரியாக தான் கணித்தோம். ஆனால் திறனில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. உலகம் முழுக்கவே வானிலை கணிப்புகளில் தவறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. வானிலை கணிப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். தொழில்நுட்பம் மட்டுமின்றி புயலை கணிக்கும் அறிவியல் அம்சமும் முழுவமையாக வேண்டும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback