Breaking News

தென் கொரியாவில் 181 பேருடன் தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம் 179 பேர் பலி அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

தென் கொரியாவில் 181 பேருடன் தரையிறங்கும் போது வெடித்து சிதறிய விமானம் 179 பேர் பலி அதிர்ச்சி வீடியோ 

தென் கொரியாவின் எம்பிசி டிவி, ஜெஜு ஏர் ஃப்ளைட் 2216 இன் வலது எஞ்சினில், தென்கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது



தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது.

முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் விமானம் வெடித்து சிதறியது. 

இந்த கோர விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1873218999691165815

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback