Breaking News

உத்தரபிரதேசத்தில்ஆக்கிரமிப்பு என்ற பெயரில் 185 ஆண்டு பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிப்பு வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

உத்தரபிரதேசத்தில்ஆக்கிரமிப்பு என்ற பெயரில்  185 ஆண்டு பழமையான மசூதியின் ஒரு பகுதி இடிப்பு வீடியோ இணைப்பு 

உத்தரபிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள 185 ஆண்டு பழமையான மசூதியின் ஒருபகுதி இடித்து அகற்றம்  

ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை




உத்தர பிரதேசத்தில் உள்ள பதேபூர் மாவட்டத்தில்  உள்ள லாலாவ்லி நகரில் பழமையான நுாரி மசூதி உள்ளது.  இந்த மசூதி சுமார் 185 ஆண்டுகள் பழைமையானது ஆகும்

இந்நிலையில், பான்டா - பஹ்ரைச் நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பொதுப்பணித்துறையினர் நேற்று இந்த மசூதியின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மசூதியில் 65 அடி நீளமுள்ள பகுதியை புல்டோசர் வைத்து அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நுாரி மசூதி 1839ல் கட்டப்பட்டது. மசூதியை சுற்றியுள்ள சாலை 1956ல் தான் அமைக்கப்பட்டது.''எனினும் மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1866797057664794846

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback