எச்.ராஜா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு - 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிப்பு முழு விவரம்
அட்மின் மீடியா
0
எச்.ராஜா குற்றவாளி - சிறை தண்டனை விதிப்பு
பெரியார் சிலையை உடைப்பேன்” எனப் பேசிய வழக்கு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜகவின் எச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. இரு வழக்குளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.! அவதூறு வழக்கில் ஹெச்.ராஜா தரப்பில் மேல் முறையீடு செய்ய உள்ளதால் தண்டனை நிறுத்திவைப்பு
பாஜக மூத்த தலைவராஜ ஹெச்.ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாகவும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட பாஜக நிர்வாகி எச்.ராஜா, குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 6 மாத சிறை தண்டனை வழங்கியது.
அவரது சமூக வலைதளத்தில் இருந்து அந்த இரு பதிவுகளும் வெளியானதாக காவல்துறை ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் ஹெச்.ராஜா அவதூறாக பேசி இருந்தார். இது தொடார்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
Tags: அரசியல் செய்திகள்