ஜெர்மனியை உலுக்கிய விபத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்தில் மக்கள் மீது காரை மோதச் செய்து விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் பலி 80 பேர் காயம் வைரல் வீடியோ
ஜெர்மனியை உலுக்கிய விபத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்ட கூட்டத்தில் மக்கள் மீது காரை மோதச் செய்து விபத்து ஏற்படுத்தியதில் 2 பேர் பலி 80 பேர் காயம் வைரல் வீடியோ
ஜெர்மனி மேக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தை கூட்டத்தில் திட்டமிட்டு கண்மூடித்தனமாக அதிவேகமாக காரை மோதச் செய்து விபத்து ஏற்படுத்திய ஜெர்மனியில் மருத்துவராக பணிபுரியும் சவூதி அரேபியாவை சேர்ந்தவர் கைது .இந்த விபத்தில் 2 பேர் பலி 80 பேர் காயம் என அரசு தரப்பில் அறிவிப்பு
ஜெர்மனியில் உள்ள மேக்டேபர்க் நகரில் வெள்ளிக்கிழமை மாலை கிறிஸ்துமஸ் சந்தைக்குள் கார் ஒன்று தாறுமாறாக ஓடியதில் 2 பேர் கொல்லப்பட்டர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தவர்களில், 15 பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். 37 பேர் மிதமான காயங்களுக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் 16 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.100 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 50 மீட்புப் பணியாளர்கள் உட்பட அவசரகால பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கவும், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் விரைந்து வந்தனர்.
இது தொடர்பாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தான் அந்தக் காரை ஓட்டிவந்தார். அவர் ஓட்டிவந்த பிஎம்டபிள்யு காரை வாடகைக்கு எடுத்துள்ளார். அவர் மட்டுமே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானதால் இனி வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அந்த நபர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் நிரந்தரக் குடியுரிமை பெற்று வசித்துவந்தவர் ஆவார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1870356731831988482
Tags: வெளிநாட்டு செய்திகள்