Breaking News

2050ம் ஆண்டில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் - ஆய்வறிக்கையில் தகவல் 2050 muslim population in india

அட்மின் மீடியா
0

2050ம் ஆண்டில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் - ஆய்வறிக்கையில் தகவல்  2050 muslim population in india

இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2050ம் ஆண்டில் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, புத்தம், ஜெயின், சீக்கியம் உள்ளிட்டவற்றை கூறலாம்.இதுதவிர இன்னும் பல மதங்கள் உள்ளன. இதில் உலகில் அதிக மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதற்கு அடுத்து 2வதாக இஸ்லாம் மதத்தை மக்கள் பின்பற்றுகின்றனர். 

இந்நிலையில் தான் 2050ம் ஆண்டில் எந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் அதிகம் இருப்பார்கள்? என அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  Pew Research Center 2022ம் ஆண்டு அறிக்கையாக வெளியிட்டுள்ளது

அதில் Pew Research Centre சார்பில் மக்கள்தொகை கணிப்பு 2010-2025 எனும் தலைப்பில் வெளியிடப்பட்டது. அதில் தான் தற்போது அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் இந்தோனேசியாவை பின்னுக்கு தள்ளி இந்தியா தான் முதலிடம் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள்தொகை வளர்ச்சி கணிப்புகள் என்கிற தலைப்பில் பியூ ரிசர்ச் செண்டர் 2022 ம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

2010ல் அதிக முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டிருந்த இந்தோனேஷியாவும், 2050ல் 257 மில்லியன் முஸ்லிம் மக்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

2050ம் ஆண்டில், இந்தியாவில் 310 மில்லியன் முஸ்லிம்கள் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மக்கள் தொகையில் 11% ஆகும். 

இந்தியா தொடர்ந்து மிகப்பெரிய இந்து மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் என்றும் இது 1.03 பில்லியனாக அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆய்வு அறிக்கை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.pewresearch.org/religion/feature/religious-composition-by-country-2010-2050/

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback