Breaking News

25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நீதிக்கான கூட்டணி வெற்றி முழு விபரம் Chennai Press Club

அட்மின் மீடியா
0

25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நீதிக்கான கூட்டணி வெற்றி முழு விபரம்

சென்னை பிரஸ் கிளப் என அழைக்கப்படும் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தேர்தல் 25 ஆண்டுகளுக்கு பின்பு இன்று நடைபெற்றது , மொத்தம் உள்ள 1502 வாக்குகளில் 1371 வாக்குகள் பதிவானது (91.27%) வாக்குபதிவு முடிந்து உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1972ம் ஆண்டு சென்னை பிரஸ் கிளப் உருவாக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் நலனைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சென்னை பிரஸ் கிளப்பிற்கு கடைசியாக 1999ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது.அதன் பிறகு தேர்தல் நடத்தப்படாத நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது.இதில் நீதிக்கான கூட்டணி மற்றும் ஒற்றுமை கூட்டணி என 2 அணிகள் போட்டியிட்டது. 

இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணியின் வேட்பாளர்களில் ஒருவர் தவிர அனைவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

❂தலைவர் - சுரேஷ் வேதநாயகம் (தினகரன்)

❂பொதுச் செயலாளர் - அஃசீப் முகமது  (அரண்செய்)

❂பொருளாளர் - மணிகண்டன் (ஜெயா டிவி)

❂ இணை செயலாளர் - நெல்சன் சேவியர் ( ஒன் இந்தியா)

❂துணைத் தலைவர் - சுந்தர பாரதி (புதிய தலைமுறை)

❂துணைத் தலைவர் - மதன் (நியூஸ் 18)

நிர்வாக குழு உறுப்பினர்கள்: 

⁂ஸ்டாலின் (புதிய தலைமுறை)

⁂பழனி  (பாலிமர் டிவி)

⁂விஜய் கோபால்  (ஏ என் ஐ)

⁂அகிலா (தி இந்து)

ஒற்றுமை அணி சார்பில் நிர்வாக குழு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டியிட்ட கவாஸ்கர் (தீக்கதிர்) மட்டும் வெற்றி பெற்றுள்ளார்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback