Breaking News

புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களை நேரில் அழைத்து நிவாரணம் வழங்கிய தவெக தலைவர் விஜய்!

அட்மின் மீடியா
0

புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களை நேரில் அழைத்து உதவிய தவெக தலைவர் விஜய்!


புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. 

.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. 

இந்த நிலையில், புயல், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். டி.பி.சத்திரத்தை சேர்ந்த 250 குடும்பங்களை சென்னை பனையூரில் உள்ள இல்லத்திற்கு வரவழைத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நேரில் உதவி வழங்காதது ஏன்? 

உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" மழை நிவாரணத்தை நேரில் வந்து வழங்காதது ஏன் என்பது குறித்து நிவாரணம் பெற்றவர்களிடம் தவெக தலைவர் விஜய் கூறியதாக தகவல்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1863885566963835356

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback