இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்தும் ஆன்லைன் வினாடி- வினா போட்டி முதல்பரிசு ரூ.25,000 பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்தும் ஆன்லைன் வினாடி- வினா போட்டி முதல்பரிசு ரூ.25,000 பள்ளி மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இந்திய வானிலை துறை தொடங்கப்பட்டு 150வது ஆண்டு நிறைவுபெறுவதை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.தேசிய அளவில் வானிலை ஒலிம்பியாட் போட்டியில் 8, 9 மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
இவர்களுக்கு போட்டிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் ஆன்லைன் வழியில் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன.வினாடி - வினா போட்டி எப்படி நடைபெறும்மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள பதிவு செய்த மாணவர்கள் ஆன்லைன் வழியாக போட்டிகள் நடத்தப்படும். 1 மணி நேரத்தில் 60 கொள்குறி வகை (multiple-choice questions) கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கேள்விகளுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.மாநில அளவில் வெற்றி பெறும் 3 மாணவர்கள் டெல்லியில் நடைபெறும் 1 நாள் சிறப்பு பட்டறையில் (workshop)கலந்துகொள்ளலாம். மேலும், இவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதியடைவார்கள். டெல்லியில் தேசிய அளவிலனா போட்டி நடைபெறும். ஜனவரி 15-ம் தேதி நடக்கும் ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பங்குபெறலாம். பயணம் மற்றும் தங்குவதற்கான முழு செலவையும் வானிலை துறை ஏற்கும்.வினாடி - வினா பரிசு
தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ.25,000,
இரண்டாம் பரிசு ரூ.15,000
மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும்.
மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு
முதல் பரிசு ரூ.5,000,
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ள https://mausam.imd.gov.in/met-oly/ என்ற இணையதளத்தில் டிசம்பர் 10-ம் தேதி இரவு 11.59 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
Important Dates Event
Date Registration opens: 01 December 2024 12:00 AM
End of Registration: 10 December 2024 11:59 PM
State Level Test: 14-15th December 2024
State Level Results: 17th December 2024
National-Level Camp & Contest: 14th January 2025
IMD’s Foundation Day Celebration & Distribution of Awards: 15th January 2025
Tags: முக்கிய அறிவிப்பு