Breaking News

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து 2 பேர் பலி முழு விவரம் இதோ

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மற்றும் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. 

 


இன்று மாலை 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் 3வது தளத்தில் இருந்து நிலக்கரி தேக்கி வைத்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பக்கூடிய இயந்திரம் மேலிருந்து கழண்டு கீழே விழுந்துள்ளது.

 அந்த விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் ஐந்து பேருக்கு மேல் உள்ளே சிக்கிக் கொண்டனர் என தகவல் வெளியானது. இவ்விபத்தில் சிக்கி ஸ்ரீகாந்த், மனோஜ், சீனிவாசன், முருகன், கௌதம் ஆகிய 5 ஒப்பந்த தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில்,  வெங்கடேசன் மற்றும் பழனிச்சாமி என்ற இரண்டு தொழிலாளர்கள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் 

அவர்களை தீயணைப்பு துறையினர் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback