இன்ஸ்டா காதலால் சோகம் - திருப்பூரில் காணாமல் போன பள்ளி மாணவி மற்றும் 2 இளைஞர்களின் உடல்கள் குளத்தில் சடலமாக மீட்பு! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

திருப்பூரில் காணாமல் போன பள்ளி மாணவி உட்பட 3 பேரின் உடல்கள் குளத்தில் மீட்பு! நடந்தது என்ன முழு விவரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள குறிச்சி கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரின் 16 வயதில் தர்ஷனா என்பவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தர்ஷனாவிற்கு சென்னையைச் சேர்ந்த 19 வயதான ஆகாஷ் என்பவருடன் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு தர்ஷனா காணாமல் போனார்.இது குறித்து தந்தை நாகராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து போலீசார் இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே சமயம் குறிச்சி கோட்டையை அடுத்துள்ள மானுபட்டி என்ற இடத்தில் சாலையோரம் அமைந்துள்ள ஒரு குளத்தில் 3 பேரின் உடல்கள் மிதப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

அதில் காணாமல் போன தர்ஷனா, ஆகாஷ் மற்றும் 20 வயதான வயதான மாரிமுத்து எனத் தெரியவந்தது. 3 பேரின் சடலங்களும் சாலையோரம் அமைந்துள்ள குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் 

மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது குளத்தில் தவறி விழுந்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றதை பார்த்ததாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

3 பேரின் உடல்களை கைப்பற்றி அமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் விசாரணைநடத்தி வருகின்றனர்.குளத்தில் இருந்து 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback