Breaking News

மத்திய பிரதேசத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' கூற சொல்லி 3 முஸ்லிம் சிறுவர்களை செருப்பால் அடித்த இளைஞர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் என்ற ஊரில் மூன்று முஸ்லீம் குழந்தைகளை, ஒருவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது



மத்தியபிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜக ஆளும் மத்தியபிரதேச மாநிலத்தில் 3 முஸ்லிம் சிறுவர்களை ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு இளைஞர் ஒருவர் செருப்பால் அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் கடந்த மாதம் ரத்லம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இளைஞர் ஒருவர் 3 சிறுவர்களை அடித்து கொடுமைப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் கூறுமாறு வற்புறுத்தியுள்ளார். 

இதனை இளைஞர் உடன் வந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் செருப்பால் அடித்த கைலேஷ் மற்றும் வீடியோ எடுத்த வீர் என்ற 2 இளைஞர்களை கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/iamNaveensuriya/status/1865449168627499421

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback