Breaking News

இன்ஸ்டா மூலம் 3 ஆண்டு காதல் திருமணம் செய்ய துபாயில் இருந்து வந்த மாப்பிள்ளை அடுத்து நடந்த டிவிஸ்ட் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பஞ்சாப் மாநிலம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலியை திருமணம் செய்வதற்காக துபாயில் இருந்து ₹50,000 அனுப்பிய காதலன் தீபக். திருமணத்தன்று காதலி கூறிய முகவரிக்கு சென்றபோது அப்படி ஒரு இடமே இல்லாததால் மனமுடைந்து போன காதலன்! 

இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக இன்ஸ்டாகிராமில் காதலித்தும், ஒருமுறை கூட நேரில் சந்திக்கவில்லை. காதலியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பின் போலீசில் புகாரளித்துள்ளார்



பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார். துபாயில் பணிபுரிந்து வரும் தீபக் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பஞ்சாபை சேர்ந்த மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 3 வருடமாக நேரில் சந்திக்காமல் இன்ஸ்ட்டாகிராமிலேயே சாட்டிங் மூலம் இவர்கள் உறவு வளர்ந்துள்ளது.

கடைசியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டாரும் போனிலேயே பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். மன்பிரீத் கவுர் ஊரான மோகாவில் ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்தில் வைத்து டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. எனவே தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.

ரோஸ் கார்டன் பேலஸ்க்கு உங்களை கூட்டிவருவதற்காக ஆள் அனுப்பியுள்ளதாகப் பெண் வீட்டார் போனில் தெரிவித்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாக காத்திருந்தும் யாரும் வராததால் மாப்பிளை வீட்டார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர்.அப்போது ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மணமகள் மன்பிரீத் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. எனவே நிலைமை என்ன என்பதை உணர்ந்த மாப்பிளை வீட்டார் போலீசுக்கு சென்றுள்ளனர்.கல்யாண செலவுக்காக பெண் வீட்டாருக்கு ரூ.60,000 கொடுத்ததாக மாப்பிள்ளை தீபக் போலீசில் தெரிவித்தார். 

தான் மணமகளை நேரில் பார்த்ததில்லை என்றும் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளதாகவும் தீபக் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீஸ் செல்போன் எண்ணை வைத்து மணமகள் குரூப்பை தேடி வருகிறது.

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback