ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அரசு அலுவலங்களில் வாரம் 4 நாட்கள் மட்டுமே வேலை 3 நாள் விடுமுறை காரணம் தெரியுமா
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அரசு அலுவலங்களில் வாரம் 4 நாட்கள் மட்டுமே வேலை 3 நாள் விடுமுறை காரணம் தெரியுமா
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ அரசு அந்நாட்டில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை சரி செய்ய வாரம் நான்கு நாட்கள் மட்டுமே வேலையை அறிமுகபடுத்த உள்ளது.
இதுக்குறித்து டோக்கியோ ஆளுநர் யூரிகோ கோய்கே கூறுகையிஸ்,
ஜப்பானின் கருவுறுதல் விகிதம் மக்கள் தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 விகிதத்தை விட குறைவாக 1.2 குழந்தைகள் என அதிர்ச்சியூட்டும் அளவுக்கு குறைந்துள்ளது.
எனவே ஜப்பான் தனது நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக பல்வேறு ஆலோசனைகளை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும் எனவும், மீத நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தம்பதியர் அதிக நேரம் வீட்டில் இருப்பார்கள் எனவும், வேலைப்பளு குறைந்தால் மற்ற வீட்டு விஷயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.
2025 ஏப்ரல் மாதம் முதல் அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் மூன்று நாட்கள் விடுமுறையுடன் சுருக்கப்பட்ட வேலை நாட்களை தேர்வு செய்யலாம் என்று அறிவித்தார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்