புதுச்சேரி -விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் முழு விவரம்
புதுச்சேரி -விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலையில் ஜனவரி முதல் சுங்க கட்டணம் முழு விவரம்
புதுச்சேரி-விழுப்புரம்- நாகபட்டினம் 4 வழிச்சாலையில் ஜனவரி மாதம் முதல் சுங்க கட்டண வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் வழியாக நாகப்பட்டினம் செல்ல 194 கிமீ, நான்கு வழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
புதுவை- விழுப்புரம் இடையே 29 கிமீ, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை பயன்படுத்த உபயோகிப்பாளர் கட்டணம் வரும் ஜனவரி 3ந் தேதி முதல் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதுவை திட்ட அமலாக்க பிரிவு இயக்குனர் அறிவித்துள்ளார்.இதன்படி
கார், ஜீப், வேன், இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.60, ஒரு நாளுக்குள் திரும்ப ரூ.90, மாத பாஸ் கட்டணமாக ரூ.ஆயிரத்து 985,
மாவட்டத்துக்குள் பதிவு செய்யப்பட்ட வணிக வாகனங்களுக்கு ஒரு முறை செல்ல ரூ.30, இலகுரக வணிக வாகனங்கள், சரக்கு வாகனம், மினி பஸ்கள் ஒரு முறை செல்ல ரூ.95, ஒரு நாளுக்குள் திரும்ப ரூ.145, ஒரு மாத பாஸ் கட்டணமாக ரூ.3 ஆயிரத்து 210 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஒரு முறை செல்ல ரூ.315, ஒரு நாளுக்குள் திரும்ப ரூ.475, 3 அச்சு வாகனங்களுக்கு ரூ.220, ஒரு நாளுக்குள் திரும்ப ரூ.330, அதிக அளவு கொண்ட வாகனம் ஒரு முறை செல்ல ரூ.385, ஒரு நாளுக்குள் திரும்ப ரூ.580 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வணிக உபயோகம் இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாத பஸ் கட்டணம் 20 கிமீ சுற்றளவுக்குள் ரூ.340 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை பணிகள் தொடங்கும்போது 60 கிமீக்கு சுங்கச்சாலை அமைக்கப்படாது என விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்