திருவண்ணாமலை மண் சரிவு விபத்தில் 5 சிறுவர்கள் உள்பட 7 உடல்களும் மீட்பு முழு விவரம்
ஃபெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும் சேதமும், கடுமையான பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரத்தில் வ.உ.சி நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்துள்ளதோடு, நிலச்சரிவில் மக்கள் சிக்கியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது இதில் 3 குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன. மலையிலிருந்து பாறைகள் மற்றும் சரளை மணல் குவியல்கள் ஒட்டுமொத்தமாக சரிந்து வந்ததில் அடிவாரப் பகுதியிலிருந்த வீடுகள் மீது விழுந்து சிதிலமடைந்தன. இதில் ராஜ்குமார் என்பவர் வீடு புதையுண்டது இதில் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கௌதம், மகள் இனியா, பக்கத்து வீட்டு சிறுவர்கள் மூவர் என மொத்தம் 7 பேர் புதையுண்டனர்
புதைந்த வீட்டில் சிக்கியவர்கள்
ராஜ்குமார் 32 வயது
மீனா 26 வயது
கௌதம் 9
இனியா 7 வயது
மகா 12 வயது
வினோதினி 14 வயது.
ரம்யா 12 வயது
மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது. மேலும், 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர்
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
இதன் மூலம் மண்ணில் புதைந்த ராஜ்குமார், மீனா, கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா ஆகிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
Tags: தமிழக செய்திகள்