விவசாய நிலம் வாங்க தமிழக அரசு வழங்கும் 5 லட்சம் மானியம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் Bank loan at 6 interest with TAHDCO subsidy to buy agricultural land
விவசாய நிலம் வாங்க தமிழக அரசு வழங்கும் 5 லட்சம் மானியம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் Bank loan at 6 interest with TAHDCO subsidy to buy agricultural land
நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்கள் தாட்கோ நிலம் வாங்கும் திட்டத்தின் மூலம் நிலத்தின் மதிப்பில் 50 % அல்லது அதிகபட்சமாக ரூ. 5 இலட்சம் மான்யத்துடன் கடனுதவி பெற்று நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் புதிய அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்கும் திட்டத்தின் கீழ் விவசாய நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.மேலும் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் 6% வட்டியில் கடன் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.
விண்ணப்பிக்கும் முறை:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் (www.tahdco.com) மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்
Tags: முக்கிய அறிவிப்பு